தனியார் போட்டியாளர்களை எதிர்கொள்ள நாட்டின் பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் , தனது பிராட்பேண்ட் பயனாளர்களுக்கு ரூ. 777 மற்றும் ரூ. 1277 என இரு கட்டண திட்டங்களை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த இரு பிளான்களும் வரம்பற்ற இணையம் வாய்ஸ் கால்களை வழங்குகின்றது.

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட்

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இரு திட்டங்களும் இன்று முழுவதும் நாடு முழுவதும் உள்ள புதிய வாடிக்கையாளர்களுக்கு FTTH என்ற முறையில் வழங்கப்பட உள்ளது. பிஎஸ்என்எல் Fibro Combo ULD 777 பிளானில் 50 Mbps வேகத்தில் இணையத்தை வழங்குவதுடன், மற்றொரு திட்டமான பிஎஸ்என்எல் Fibro Combo ULD 1277 பிளானில்  100 Mbps வேகத்தில் இணையம் வழங்கப்பட உள்ளது.

பிஎஸ்என்எல் Fibro Combo ULD 777

ரூ.777 வெளியிடப்பட்டுள்ள பிளானில் 50 Mbps வேகத்தில் இணையத்தை 500 ஜிபி டேட்டா வரை பெற இயலும், அதன் பிறகு 2 Mbps வேகத்தில் இணையத்தை தொடர்ந்து அளவில்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். அறிமுக சலுகையாக முதல் முறை 90 நாட்களுக்கு கிடைக்க உள்ள இந்த பிளான் ஒரு வருடத்துக்கு ரூ. 8547, இரண்டு வருடத்துக்கு ரூ. 16,317  மற்றும் மூன்று வருடத்துக்கு ரூ. 23,310 என்ற முறையே வசூலிக்கப்பட உள்ளது.

பிஎஸ்என்எல் Fibro Combo ULD 1277

ரூ.1277 வெளியிடப்பட்டுள்ள பிளானில் 100 Mbps வேகத்தில் இணையத்தை 750 ஜிபி டேட்டா வரை பெற இயலும், அதன் பிறகு 2 Mbps வேகத்தில் இணையத்தை தொடர்ந்து அளவில்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். அறிமுக சலுகையாக முதல் முறை 90 நாட்களுக்கு கிடைக்க உள்ள இந்த பிளான் ஒரு வருடத்துக்கு ரூ. 14,047, இரண்டு வருடத்துக்கு ரூ. 26,817  மற்றும் மூன்று வருடத்துக்கு ரூ. 38,310 என்ற முறையே வசூலிக்கப்பட உள்ளது.

மேலே வழங்கப்பட்டுள்ள இரு பிளான்களும் அந்தமான் மற்றும் நிக்கோபர் வட்டங்களை தவிர மற்ற வட்டங்களில் ஜூன் 12, 2018 முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இந்த திட்டங்களுக்கு பாதுகாப்பு வைப்பு நிதியாக ஒரு மாத கட்டணத்தை செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் சலுகையாக வரம்பற்ற அழைப்பு நன்மைகளை பிஎஸ்என்எல் பயனாளர்கள் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.