போஸ்ட்பெய்டு-க்கு அன்லிமிடெட் டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்

இந்திய பொதுத் துறை பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) நிறுவனம், தனது அனைத்து போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கும் அன்லிமிடெட் டேட்டா சலுகையை செயற்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

பி.எஸ்.என்.எல்

சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு ரூ.1,999 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா மற்றும் அளவில்லா அழைப்பு நன்மைகளை 365 நாட்களுக்கு வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது ஜியோ மற்றும் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் செயற்படுத்தி வரம்பற்ற டேட்டா முறை என்ற நோக்கத்தை பொதுத் துறை நிறுவனமும் கையிலெடுத்துள்ளது.

டெலிகாம்டாக் தளம் வெளியிட்டுள்ள செய்தியில், ஜூலை 1, 2018 முதல் அனைத்து பி.எஸ்என்.எல் போஸ்ட்பெயிட் திட்டங்களிலும் எவ்விதமான கூடுதல் விலை உயர்வு மற்றும் டேட்டா நன்மைகள் வழங்கப்படாமல், தொடர்ந்து நடைமுறையில் உள்ள ரூ.99 முதல் ரூ. 1525 வரையிலான போஸ்ட்பெயிட் திட்டங்களில் டேட்டா மற்றும் சலுகை வழங்கப்பட்டு கூடுதல் நன்மையாக 40Kbps வேகத்தில் அளவில்லா டேட்டாவை அறிவித்துள்ளது.

மேலும் டேட்டா ஆட் ஆன் பிளான்களாக கருதப்படுகின்ற ரூ. 50 முதல் ரூ. 1711 வரையிலான பிளான்களிலும் கூடுதல் நன்மையாக 40Kbps வேகத்தில் அளவில்லா டேட்டாவை பெறலாம் என குறிப்பிட்டுள்ளது. ஜியோ நிறுவனம் ரூ.199 கட்டணத்தில் செயற்படுத்தி வரும் போஸ்ட்பெயிட் பிளானில் 25 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லா அழைப்பு நன்மை ஆகியவற்றை வழங்குகின்றது.

 

Recommended For You