சூப்பர் ஆஃபர்.., பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு பிளானை 2 ரூபாயில் நீட்டிக்கலாம்

பொதுத் துறை டெலிகாம் நிறுவனம் பிஎஸ்என்எல் தனது பயனாளர்களக்கு சிறப்பான சேவையை வழங்கும் நோக்கில் 2 ரூபாயில் அதிகபட்சமாக மூன்று நாட்கள் வரை பயன்பாட்டில் உள்ள ப்ரீபெய்டு பிளான் நிறைவடையும் போது நீட்டிக்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பிஎஸ்என்எல் நீட்டிகப்பட்ட ஆஃபர்

இதற்கு முன்பாக இந்நிறுவனம் ரூ.19 மதிப்பில் வழங்கிவந்த நீட்டிக்கப்பட்ட ரீசார்ஜ் திட்டத்தை 30 நாட்கள் வரை வழங்கி வந்தது. அதாவது நீங்கள் ரீசார்ஜ் செய்த பிளான் இன்றுடன் நிறைவடைகின்றது என்றால் கூடுதலாக 30 நாட்கள் வரை அந்த ரீசார்ஜ் பிளானின் சலுகைகளை பெற ரூ.19 கொண்டு ரீசார்ஜ் செய்தால் போதுமானதாகும்.

தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாடு வட்டத்தில் உள்ள பயனாளர்களுக்கு என ரூபாய் 2 மதிப்பு ரீசார்ஜினை மேற்கொண்டால் முந்தைய பிளானின் நீட்டிக்கப்பட்ட பிளானை மேலும் 3 நாட்கள் வரை பயன்டுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் 2399

சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூபாய் 2,399 கட்டணத்தில் 600 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 250 நிமிட அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும். மற்றபடி எந்த டேட்டா பலனும் வழங்கப்படுவதில்லை.