தனியார் டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமல்ல, போட்டியாளர்களை சமாளிக்க தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல், அவ்வப்போது புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை கூடுதல் நன்மையுடன் வெளிப்படுத்தி வரும் நிலையில் ரூ.78 கட்டணத்தில் பிளான் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு ரூ.78 கட்டணத்திலான ப்ரீபெய்ட் திட்டத்தை பி.எஸ்.என்.எல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பிளானுக்கு கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் இந்தத் திட்டத்தை தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

பி.எஸ்.என்.எல் ரூ.78 ப்ரீபெய்ட் திட்டத்தில் அளவில்லா வாய்ஸ் கால்  மற்றும் வீடியோ கால் சேவையை 10 நாட்கள் வேலிடிட்டியுடன் பி.எஸ்.என்.எல் வழங்குகிறது. மேலும் நாள் ஒன்றிற்கு 2 ஜிபி உயர்வேக 3ஜி மற்றும் 2ஜி டேட்டா சேவையை 10 நாட்களுக்கென மொத்தமாக 20 ஜிபி டேட்டா நன்மை வழங்குகிறது. தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் 80 Kbps ஆக குறைக்கப்படும்.

வரம்பற்ற வீடியோ காலிங் சேவையை பயனர்கள் ஆக்டிவேட் செய்ய ‘STV COMBO78’ என்று மெசேஜ் டைப் செய்து 123 என்ற எண்ணிற்கு அனுப்பினால், உடனடியாக இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம்.