பிஎஸ்ன்எல் ஆஃபர்
வருகின்ற ஏப்ரல் 1ந் தேதி முதல் பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டத்தில், சிறப்பு திட்டத்தை 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தில் எவ்வித அழைப்பு நிபந்தனைகளும் வழங்கப்படாமல், வரம்பற்ற அழைப்புகள் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் ரோமிங் உட்பட அனைத்து தருனங்களில் வழங்குகின்றது. 1ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்குகின்றது.
இந்த திட்டம் மற்ற வட்ட வாடிக்கையாளர்களுக்கு சிறிய அளவிலான விலை மாற்றத்துடன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.
ஜியோ நிறுவனம் ரூ.98 கட்டனத்தில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 2ஜிபி உயர்வேக டேட்டா மற்றும் வரம்பற்ற டேட்டா ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்கி வருகின்றது.