ரூ.548-க்கு தினமும் 5ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் ரூ.548-க்கு கட்டணத்தில் தினமும் 5ஜிபி டேட்டா 90 நாட்களுக்கு வழங்குகின்றது.

ரக்‌ஷா பந்தன் – பிஎஸ்என்எல்

பஞ்சாப் மற்றும் குஜராத் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 258, ரூ. 378, மற்றும் ரூ. 548 ஆகிய பிளான்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரூ.548 கட்டணத்தில் 90 நாட்களுக்கு தினமும் 5ஜிபி டேட்டா வழங்குகின்றது.

ரூ.378-க்கு கட்டணத்தில் 30 நாட்களுக்கு தினமும் 4ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற பிஎஸ்என்எல் அழைப்புகள் மற்றும் தினசரி 30 நிமிட இலவச அழைப்புகளை மற்ற நெட்வொர்க்குகளுக்கு வழங்குகின்றது.

ரூ.259 கட்டணத்தில் கிடைக்கின்ற திட்டத்தில் ரூ.220 டாக்டைம் வழங்கப்பட்டு 110 நிமிட பிஎஸ்என்எல் அழைப்புகள் உள்ளிட்டவை 30 நாட்களுக்கு வழங்குகின்றது.

மேலே வழங்கப்பட்டுள்ள பஞ்சாப் மற்றும் குஜராத் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது, மற்ற வட்டங்களுக்கு விரிவுப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது.

Rakhi pe Saugaat

பொது தொலைத்தொடர்பு துறையின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு ரீசார்ஜ் திட்டங்கள் Rakhi pe Saugaat என்ற பெயரில் ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 15 வரை மட்டுமே கிடைக்க உள்ளது. ரூ.74, 189, 289 மற்றும் 389 ஆகிய பிளான்கள் கிடைக்க உள்ளது,

ரூ.74-க்கு ரீசார்ஜ் திட்டம் பொறுத்தவரை 5 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி பெற்று 1ஜிபி டேட்டா 3ஜி என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது.ரக்சா பந்தன்’ பிஎஸ்என்எல் ஆபர் பொறுத்தவரை இந்தியாவின் அனைத்து வட்டங்களில் உள்ளவர்களும் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டெலிகாம் செய்திகள் இங்கே படிக்கலாம் தொடர்ந்து எங்களை பேஸ்புக்கில் பின்தொடர fb.com/gadgetstamilan

Recommended For You