Home Tech News Telecom BSNL : புதுப்பிக்கப்பட்ட பிஎஸ்என்எல் ரூ.525 & ரூ.725 போஸ்ட்பெய்டு பிளான்கள்

BSNL : புதுப்பிக்கப்பட்ட பிஎஸ்என்எல் ரூ.525 & ரூ.725 போஸ்ட்பெய்டு பிளான்கள்

பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம் தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் ரூபாய் 525 மற்றும் ரூபாய் 725 மாதந்திர திட்டங்களில் கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.

பொதுத் துறை டெலிகாம் நிறுவனம் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தொடர்ந்து தனியார் நிறுவனங்களை எதிர்த்து பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. தற்போது தனது போஸ்ட்பெயிடு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நன்மைகளில் கூடுதல் டேட்டாவை இணைத்துள்ளது.

பிஎஸ்என்எல் ரூ. 525

ரூ.525 பிளானில் பயனாளர்கள் முன்பாக 15 ஜிபி டேட்டா பெற்று வந்த நிலையில், இனி மாதம் 40 ஜிபி டேட்டா நன்மையை பெறுவதுடன் வழக்கம் போல வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் வழங்கப்படுகின்றது. கூடுதலாக அமேசான் பிரைம் சந்தா இணைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ. 725

ரூபாய் 725 பிளானில் பயனாளர்கள் இனி மாதம் 50 ஜிபி டேட்டா நன்மையை பெறுவதுடன் வழக்கம் போல வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் வழங்கப்படுகின்றது. கூடுதலாக அமேசான் பிரைம் சந்தா இணைக்கப்பட்டுள்ளது.

வோடபோன், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தாத டேட்டா நன்மையை அடுத்த மாதத்திற்கு எடுத்துச் செல்லும் டேட்டா ஃபார்வோர்ட் வசதியை பிஎஸ்என்எல் வழங்குவதில்லை.

Exit mobile version