bsnl recharge offers

பிஎஸ்என்எல் நிறுவனம், தொடர்ந்து தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு சவாலான விலையில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் திட்டங்களை வழங்கி வரும் நிலையில், STV 35, STV 53 மற்றும் STV 395 பிளான்களில் ரீசார்ஜ் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.666 பிளானின் வேலிடிட்டியை சமீபத்தில் உயர்த்திருந்த நிலையில் புதியதாக இந்த ரீசார்ஜ் திட்டத்தில் குறைந்த விலை திட்டங்களில் கூடுதல் நன்மையை அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் ரீசார்ஜ் ஆஃபர்

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம், 3ஜி சேவையில் பல்வேறு அம்சங்களை கொண்டதாக வெளியிட்டு வரும் நிலையில் STV 35, STV 53 மற்றும் STV 395 பிளானில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

முன்பாக ரூ.35 கட்டணத்தில் வழங்கி வந்த பிளான் 5 நாட்கள் வேலிடிட்டி உடன் 250MB  கொண்டதாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது 25 மடங்கு கூடுதலாக 5GB டேட்டா தரவினை வழங்குகின்றது.

ரூபாய் 53 கட்டணத்தில் 21 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக வழங்கப்பட்ட நிலையில் தற்போது 14 நாட்களாக குறைக்கப்பட்டு, டேட்டா தரவு 8 ஜிபி டேட்டாவாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பாக 250MB மட்டும் வழங்கப்பட்டு வந்தது.

STV 395 ரீசார்ஜ் பிளானில் முன்பாக 3000 நிமிடங்கள் ஆன் நெட் வாய்ஸ் கால் மற்றும் 1800 ஆஃப் நெட் வாய்ஸ் கால் வழங்கி வந்த நிலையில் தற்போது நிபந்தனையற்ற அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்பட்டு தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.