பிஎஸ்என்எல்

பொதுத்துறை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பிஎஸ்என்எல் நிறுவனம், ரூ.186 மற்றும் ரூ.187 பிளானில் டேட்டா பயனை பதுப்பித்துள்ளது. பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு இலவச சலுகையாக அமேசான் பிரைம் சந்தா சலுகை வழங்கப்படுகின்றது.

ரூ.186 மற்றும் ரூ.187 புதிய ரீசார்ஜ் பிளான்: 

முந்தைய பிளானில் 1ஜிபி டேட்டா மட்டுமே வேலிடிட்டி காலம் முழுதும் இன்டெர்நெட் சேவை வழங்கப்பட்டது. தற்போது இந்த டேட்டா வரம்பு இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி 186 அல்லது 187 ரூபாய் பிளானில் ரீசார்ஜ் செய்தால், நாள் ஒன்றுக்கு அதிகபட்ச வேகத்தில் 2ஜிபி டேட்டா பெற முடியும். தினசரி டேட்டா காலியானதும் இணையத்தின் வேகம் 40 Kbps ஆக குறைக்கப்படும். தற்போது இந்த இரு ரீசார்ஜ் திட்டங்களில் டெல்லி மற்றும் மும்பை எம்டிஎன்எல் வட்டங்களில் ரோமிங்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. முன்பாக இந்த சலுகை வழங்கப்படவில்லை.

ரூ.187 பிளானில் கூடுதலாக பிஎஸ்என்எல் வழங்குகின்ற  PRBT எனப்படும் காலர் டோன் வழங்கப்படுகிறது. ஆனால் ரூ.186 பிளானில் இந்த நன்மை வழங்கப்படுவதில்லை. குறிப்பாக இந்த திட்டம் தமிழ்நாடு வட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட்

பி.எஸ்.என்.எல் ரூ. 745 க்கு மேல் திட்டங்களை தேர்வு செய்த பிராட்பேண்ட் பயனர்களுக்கு இலவசமாக பிரைம் மெம்பர்ஷிப்பை வழங்குகின்றது. குறிப்பாக இந்நிறுவனத்தின் மற்ற  DSL, Bharat Fiber மற்றும் BBoWiFi பயனாளர்களுக்கும் கிடைக்கும்.

499 க்கும் குறைவான பிராட்பேண்ட் திட்டங்களுக்கு பிஎஸ்என்எல் 15% கேஷ்பேக் வழங்குகிறது.  20% கேஷ்பேக் ரூ. 499 முதல் ரூ .900 வரையும் மற்றும் 25% கேஷ்பேக் ரூ .900 மற்றும் அதற்கு மேற்பட்ட பிராட்பேண்ட் திட்டங்களுக்கு வழங்குகின்றது. இந்த கேஷ்பேக் சலுகைக்கு தகுதிபெற வாடிக்கையாளர்கள் வருடாந்திர (12 மாதங்களுக்கு) திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். ஒரு வாடிக்கையாளர் மேலே குறிப்பிட்டுள்ள விலை வரம்பில் உள்ள திட்டங்களைத் தேர்வுசெய்தால், பிஎஸ்என்எல் அவர்களுக்கு ஒரு வருட அமேசான் பிரைம் உறுப்பினர் சந்தாவை இலவசமாக வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு வழங்குகின்ற நன்மைகளில் குறிப்பாக, அமேசான் பிரைம் வீடியோ, அமேசான் மியூசிக், விரைவாக ஆர்டர் செய்த பொருட்களை பெறுவது மற்றும் அமேசான் வழங்குகின்ற சிறப்பு விற்பனையை முன்கூட்டியே அணுகலாம்.