பி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்

இந்திய அரசு டெலிகாம் நிறுவனமான, பி.எஸ்.என்.எல் ரூபாய் 349 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 3.2 ஜிபி டேட்டா நன்மை வழங்கும் ப்ரீபெய்ட் பிளான் வேலிட்டியை 10 நாட்கள் வரை அதிகரித்து, தற்போது 64 நாட்களாக உயர்த்தியுள்ளது.

தனியார் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கி வரும் நிலையில் ஆனால் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 2ஜி மற்றும் 3ஜி சேவையை மட்டும் வழங்குகின்றது. விரைவில் தமிழகம் உட்பட பல்வேறு வட்டங்களில் 4ஜி சேவையை பிஎஸ்என்எல் தொடங்க திட்டமிட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல் ரூ.349 பிளான் சிறப்புகள்

இந்நிறுவனம், பி.எஸ்.என்.எல் பம்பர் ஆஃபர் என்ற பெயரில் செயற்படுத்தி வரும் நன்மையில் சாதாரணமாக வழங்கப்படுகின்ற தினசரி டேட்டா வரம்பை விட கூடுதலாக 2.2 ஜிபி டேட்டா வழங்கி வருவது குறித்து நாம் முன்பே குறிப்பிட்டிருந்தோம். அந்த வகையில், தற்போது ரூ.349 பிளான் நாள் தோறும் 3.2 ஜிபி டேட்டா வழங்ப்பபட்டு வருவதனை பயனாளர்கள் அறிந்திருப்பீர்கள்.

ரூபாய் 349 கட்டணத்தில் வழங்கப்படுகின்ற ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3.2 ஜிபி டேட்டா உயர்வேகத்திலும் அதன் பிறகு வரம்பற்ற டேட்டா 40 Kbps வேகமாக குறைக்கப்படுகிறது. இது தவிர இந்த பிளானில் அளவில்லா வாய்ஸ் கால், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்கி வருகின்றது. பி.எஸ்.என்.எல்

முன்பாக இந்த திட்டம் 54 நாட்களுக்கு செயல்பட்டு வந்த நிலையில், இனி 64 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக டெலிகாம்டாக் குறிப்பிட்டுள்ளது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னதாக ரூ.98 மற்றும் ரூ.99 முறையே வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பிளான் வேலிடிட்டி 26 நாட்களில் இருந்து 24 நாட்களாக குறைத்திருந்தது. அதே போல சமீபத்தில் எரோஸ் நவ் சந்தா இணைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பி.எஸ்.என்.எல் 4ஜி சேவை வழங்கப்படுவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றது.