பிஎஸ்என்எல் Recharge

பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம், பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் சார்பாக தினமும் 170 ஜிபி டேட்டா வழங்குகின்ற பிஎஸ்என்எல் பிளானை அறிவித்துள்ளது. Fibre-to-the-Home முறையில் பல்வேறு டேட்டா பிளான்களின் திட்டங்களில் கூடுதல் டேட்டாவை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

ஜியோ ஜிகா ஃபைபர், ஏர்டெல் ஃபைபர், ஏக்ட் ஃபைபர் உள்ளிட்ட பிராட்பேண்ட் சேவைகளுக்கு போட்டியாக பொதுத்துறை நிறுவனம் பாரத் ஃபைபர் என்ற பெயரில் FTTH சேவையை தொடங்கியுள்ளது. முன்பே வழங்கப்பட்டு வந்த திட்டங்களில் கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. ரூ. 777, ரூ. 1,277, ரூ. 2,499, ரூ 3,999, ரூ 5,999, ரூ 9,999 மற்றும் ரூ 16,999 ஆகிய திட்டங்களில் முன்பாக ரூ.2,499 பிளான் தினமும் 40 ஜிபி டேட்டா வரம்பாக உயர்த்தியிருந்தது. பொதுவாக அனைத்து பிஎஸ்என்எல் FTTH திட்டங்களிலும் வரம்பற்ற இணையம் வழங்கப்படுகின்றது.

BSNL : தினமும் 170 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் பிளான்கள்..!

அனைத்து திட்டங்களிலும், தற்போது வழங்குகின்ற டேட்டா நன்மையை பின்வருமாறு ;-

ரூ.777 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 18 ஜிபி டேட்டா வழங்குவதனால் 18GB Plan என பெயரிடப்பட்டு அதிகபட்சமாக 50 Mbps வேகத்தில் உயர்வேக டேட்டா அதன்பிறகு இணைய வேகம் 2 Mbps ஆக குறைக்கப்படும்.

ரூ.1277 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 25 ஜிபி டேட்டா வழங்குவதனால் 25GB Plan என பெயரிடப்பட்டு அதிகபட்சமாக 100 Mbps வேகத்தில் உயர்வேக டேட்டா அதன்பிறகு இணைய வேகம் 2 Mbps ஆக குறைக்கப்படும்.

முன்பே ரூ.2,499 திட்டம் தினசரி பயன்பாட்டுக்கு 40 ஜிபி டேட்டா பிளான் வழங்குப்படுகின்றது. அதிகபட்சமாக 100 Mbps வேகத்தில் உயர்வேக டேட்டா அதன்பிறகு இணைய வேகம் 2 Mbps ஆக குறைக்கப்படும்.

ரூ.3,999 திட்டத்தில் அல்லது 50GB Plan நாள் ஒன்றுக்கு 50 ஜிபி டேட்டா வழங்குவதுடன், அதிகபட்சமாக 100 Mbps வேகத்தில் உயர்வேக டேட்டா அதன்பிறகு இணைய வேகம் 4 Mbps ஆக குறைக்கப்படும்.

ரூ.5,999 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 80 ஜிபி டேட்டா வழங்குவதுடன், அதிகபட்சமாக 100 Mbps வேகத்தில் உயர்வேக டேட்டா அதன்பிறகு இணைய வேகம் 6 Mbps ஆக குறைக்கப்படும்.

ரூ.9,999 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 120 ஜிபி டேட்டா வழங்குவதுடன், அதிகபட்சமாக 100 Mbps வேகத்தில் உயர்வேக டேட்டா அதன்பிறகு இணைய வேகம் 8 Mbps ஆக குறைக்கப்படும்.

ரூ.16,999 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 170 ஜிபி டேட்டா வழங்குவதுடன், அதிகபட்சமாக 100 Mbps வேகத்தில் உயர்வேக டேட்டா அதன்பிறகு இணைய வேகம் 10 Mbps ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BSNL : தினமும் 170 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் பிளான்கள்..!

அனைத்து திட்டங்களிலும் பொதுவாக பிஎஸ்என்எல் இலவச அழைப்பு நன்மை வழங்கி வருகின்றது. ஜியோ நிறுவனம் விரைவில் ஜிகா ஃபைபர் சேவையை பல்வேறு முன்னணி நகரங்களில் வழங்க உள்ளது.