பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனமாக விளங்கும் பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்ற தொடக்கநிலை ரீசார்ஜ் பிளானான ரூ.29 திட்டத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள விபரத்தை பின்வருமாறு காணலாம்.

புதுப்பிகப்பட்டுள்ள ரூ. 29 கட்டணத்திலான தொடக்கநிலை பிளானில் நாள் ஒன்றிற்கு அதிகபட்சமாக 1 ஜிபி உயர்வேக 2ஜி அல்லது 3ஜி தரவினை பெறுவதுடன் , அளவில்லா வாய்ஸ் கால் (டெல்லி மற்றும் மும்பை தவிர) இலவச PRBT (காலர் ட்யூன்) , 300 இலவச உள்ளூர் மற்றும் தேசிய எஸ்எம்எஸ் ஆகியவற்றை 7 நாட்கள் அதாவது ஒரு வாரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது.

முன்பாக இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா நன்மை , தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் மிகப் பெரிய அளவில் பிஎஸ்என்எல் நன்மைகளை குறைத்துள்ளது. ஆனால் வரம்பற்ற அழைப்பு நன்மை மற்றும் இலவச காலர் டியூன் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. ஜியோ உட்பட மற்ற தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் ரூ.49 கட்டணம் தொடங்கியே பல்வேறு சலுகைகளை வழங்கி வருவது குறிப்பிடதக்கதாகும்.