பிஎஸ்என்எல்

போட்டியாளர்களை எதிர்கொள்ள பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம், தனது ரூபாய் 198 மற்றும் ரூபாய் 47 பிளான் ஆகியவற்றில் கூடுதல் டேட்டா மற்றும் வேலிடிட்டியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

பொதுவாக முந்தைய இரு திட்டங்களிலும் குறைவான டேட்டா மற்றும் வேலிடிட்டி வழங்கப்பட்ட நிலையில் தற்போது டேட்டா நன்மை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ. 198 ரீசார்ஜ் பிளான்

பிஎஸ்என்எல் ரூ.198 கட்டணத்தில் வழங்குகின்ற பிரீபெய்டு ரீசார்ஜ் முறையில் தினசரி 2 ஜிபி வீதம் 54 நாட்களுக்கு வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தின் மூலம் மொத்தமாக 108 ஜிபி டேட்டா கிடைக்கும். முன்பாக இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா நன்மையை 28 நாட்களுக்கு மட்டும் வழங்கி வந்தது.

அடுத்ததாக இந்நிறுவனம் வெளிப்படுத்தியுள்ள மற்றொரு டேட்டா திட்டம் மாற்றமாக ரூ.47 ரீசார்ஜ் திட்டம் அமைந்துள்ளது. இந்த திட்டத்தில் தற்போது வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 1 ஜிபி டேட்டா மொத்தம் 9 நாட்களுக்கு வழங்குகின்றது. முன்பாக இந்த திட்டத்தில் 11 நாட்கள் வேலிடிட்டி மட்டும் வழங்கப்பட்டு டேட்டா நன்மை வழங்கப்படவில்லை.

முன்பாக இந்நிறுவனம் வழங்கி வந்த 2.21 ஜிபி கூடுதல் டேட்டா வழங்குகின்ற பிஎஸ்என்எல் பம்பர் ஆஃபர் சலுகையை தற்போது ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பாக இந்த சலுகை செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு படிப்படியாக தொடர்ந்து வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

பம்பர் ஆஃபர் சலுகையை பெற ரூ. 186, ரூ. 429, ரூ. 485, ரூ. 666, ரூ. 999, மற்றும் ரூ. 1,699 பிளான்களில் ஏதுனும் ஒன்றை பயன்படுத்தலாம்.