கடந்த சில மாதங்களாக பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிமுகம் செய்த பொது தொலைத்தொடர்புத் துறை பிஎஸ்என்எல் STV 395 மற்றும் STV 333 வேலிடிட்டியை குறைத்திருப்பதுடன் STV 444 பிளானை நீக்கியுள்ளது.
பிஎஸ்என்எல் டெலிகாம்
சமீபத்தில் பல்வேறு சிறப்பு பிளான்களை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல் தனியார் நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் பி.எஸ்.என்.எல் சௌக்கா 444 திட்டத்தில் தினமும் 4ஜிபி டேட்டா 90 நாட்களுக்கு வழங்கியது.
தற்போது சௌக்கா 444 திட்டத்தை திரும்ப பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றது. எனவே இந்த பிளானை இனி பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை.
பிஎஸ்என்எல் STV 395 (Nehle per Dehla) என்ற திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா , 3000 பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் அழைப்புகள் மற்றும் 1800 நிமிட மற்ற நெட்வொர்க் அழைப்புகளை வழங்கி வரும் நிலையில் , இதன் தற்போதைய கால அளவு 71 நாட்களிலிருந்து 56 நாட்களாக சலுகைகளில் மாற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் STV 333 டிரிப்பிள் ஏஸ் என்ற திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கி வரும் நிலையில் இனி தினமும் 2ஜிபி டேட்டா என குறைக்கப்பட உள்ளது. மேலும் இதன் கால அளவு 90 நாட்களிலிருந்து 56 நாட்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
28 நாட்கள் வேலிடிட்டி பெற்ற STV 339 திட்டத்தில் தினமும் மூன்று ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற பிஎஸ்என்எல் அழைப்புகள், மற்றும் தினசரி 25 நிமிட மற்ற நெட்வொர்க் அழைப்புகளை வழங்குகின்றது.
ஜியோ நிறுவனம் சமீபத்தில் ரூ.399 க்கு தினமும் 1ஜிபி என 84 நாட்கள் வேலிடிட்டி பெற்ற தன் தனா தன் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது.