300ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் அதிரடி பிளான் முழு விபரம்இந்திய நாட்டின் முதன்மையான பிராட்பேண்ட் வழங்குநராக விளங்கும் பிஎஸ்என்எல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.1091 மதிப்பிலான திட்டத்தில் 10 Mbps வேகத்தில் 300ஜிபி டேட்டா மற்றும் 2 Mbps வேகத்தில் வரம்பற்ற முறையில் டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட்

நாட்டின் பொது தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனியார் போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையில் அதிரடி திட்டங்களை தொடர்ந்து செயற்படுத்தி வருகின்ற நிலையில் பிராட்பேண்ட் பயனாளர்களுக்கு என ரூ.1091 கட்டணத்திலான திட்டத்தில் ஒரு பில்லிங் முறையில் 300ஜிபி உயர்வேக டேட்டாவை 10 Mbps வேகத்தில் வழங்குவதுடன், கூடுதலான வரமபற்ற டேட்டா 2 Mbps வேகத்தில் தொடர்ந்து வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

1 எம்பி இடவசதியுடன் கூடிய இலவச இமெயில், வரம்பற்ற அழைப்புகளை 10:30 PM முதல் 6 AM வரை முற்றிலும் இலவசமாக பிஎஸ்என்எல் நிறுவன எண்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டம் ஏர்டெல், ஏக்ட் உள்ளிட்ட பிரபலமான பிராட் பேண்ட் நிறுவனங்களுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்தும் திட்டமாக விளங்க உள்ளது. மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு தினசரி பயன்பாட்டுக்கு 3ஜிபி டேட்டா 51 நாட்களுக்கு 248 கட்டணத்தில் ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 30 வரை வழங்க உள்ளது.