365 நாட்களுக்கு 1095 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் பிளான் விபரம்

பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம், தனது ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு வருடாந்திர திட்டத்தில் கிடைக்கின்ற ரூ.1699 மதிப்புள்ள ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகின்றது.

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுடைய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை 40 சதவீதம் அளவிற்கு உயர்த்தியுள்ள நிலையில் பொதுத்துறை நிறுவனம் தற்போது வரை கட்டண உயர்வை அறிவிக்காத நிலையில், அடுத்த சில வாரங்களில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.

முன்பே பயன்பாட்டில் உள்ள ரூ.1699 திட்டத்தில் பொதுவாக நீட்டிக்கப்பட்ட கூடுதல் டேட்டா சலுகை வழங்கப்படுகின்றது. பொதுவாக இந்த பிளானில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படுகின்ற நிலையில் கூடுதலாக தினமும் 250 நிமிடங்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கின்றது. இந்த பிளானின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். கூடுதலாக 1 ஜிபி டேட்டா வழங்கப்படுவதனால் மொத்தமாக நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கும்.

ரூ.1,999 ப்ரீபெய்ட் பிளான் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டத்திற்கு மட்டும் தற்போது நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்ற நிலையில் கூடுதலாக தினமும் 250 நிமிடங்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கின்றது. இந்த பிளானின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.