இந்தியாவின் பொதுத் துறை தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் ரூ. 1999 கட்டணத்தில் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகின்ற பிளானில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 730 ஜிபி டேட்டா, 36,500 எஸ்எம்எஸ்  என மொத்தமாக 365 நாட்களுக்கு வழங்குகின்றது.

பி.எஸ்.என்.எல் ரூ. 1999

முதற்கட்டமாக சிறப்பு சலுகை முறையாக சென்னை மற்றும் தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டாரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல் எஸ்டிவி காம்போ 1999 பிளான், ஜியோ உட்பட தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட கூடுதல் நன்மைளை வழங்குவதாக அமைந்துள்ளது.

ரூ.1999 கட்டணத்தில் ஜூன் 25 , 2018 முதல் செப்டம்பர் 22, 2018 வரை வழங்கப்பட உள்ள இந்த திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்யும்பட்சத்தில் நாள் ஒன்றிற்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், மற்றும் அளவில்லா உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் ரோமிங் உட்பட (டெல்லி மற்றும் மும்பை தவிர) அனைத்து வட்டங்களிலும் வழங்குகின்றது. 365 நாட்கள் செல்லுபடியாகின்ற இந்த திட்டத்தில் மொத்தமாக 730 ஜிபி டேட்டா மற்றும் 36,500 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகின்றது.

டெல்லி மற்றும் மும்பை வட்டங்களில் எம்டிஎன்எல் செயல்படுவதனால் இந்த வட்டங்களை தவிரத்து மற்ற வட்டங்களில் இலவச அழைப்பு பொருந்தாது. குறிப்பாக இந்த திட்டத்தின் மூலம் பிஎஸ்என்எல் 3ஜி இணையத்தின் 1ஜிபி டேட்டா விலை ரூ. 2.73 பைசாவாக குறைந்துள்ளது.

போட்டியாளரான ஜியோ வழங்கும் ரூ.1999 பிளானில் 180 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ், தினசரி வரம்பின்றி மொத்தமாக 125ஜிபி டேட்டா மட்டும் வழங்கப்படுகின்றது.