70வது குடியரசு தினத்தை முன்னிட்டு, பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம் ரூ.269 கட்டணத்தில் சிறப்பு பிளானை ஜனவரி 26 முதல் ஜனவரி 31 வரை மட்டும் அறிமுகம் செய்துள்ளது. இந்த பிளானில் வரம்பற்ற முறைகள் வழங்கப்படவில்லை.
பிஎஸ்என்எல் ரூ.269
70 வது குடியரசு தினம் நாளை கொண்டாப்பட உள்ள நிலையில், பொதுத்துறை டெலிகாம் நிறுவனம் சிறப்பு பிளானை 26 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் வழங்கபட்டுள்ள இந்த திட்டம் அனைத்து பிஎஸ்என்எல் டெலிகாம் வட்டங்களில் உள்ள அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்க உள்ளது.
26 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிஎஸ்என்எல் ரூ.269 பிளானில் , மொத்தமாக 2600 நிமிடங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், 260 எஸ்எம்எஸ் மற்றும் 2.6GB டேட்டா 2G / 3G வேகத்தில் கிடைக்க உள்ளது.
சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம், ரூ.1312 கட்டணத்தில் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் மற்றும் ரூ.899 கட்டணத்தில் 6 மாதம் செல்லுபடியாகின்ற ரீசார்ஜ் பிளான் ஆகியவற்றை வெளிப்படுத்தியிருந்தது.
இதுதவிர இந்நிறுவனம், ரூ.98 கட்டணத்திலான திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜி.பி. உயர்வேக டேட்டா வழங்க உள்ளது. இந்த பிளான் 26 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக கிடைக்கும்.
மேலும் மற்றொரு பிளான், ரூ.99 கட்டணத்தில் வழங்குகின்ற பிளானில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை 26 நாட்களாக இருந்த நிலையில், தற்போது 24 நாட்களாக குறைத்து வெளியிட்டுள்ளது.