ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களை தொடர்ந்து பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம் தங்களுடைய போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 மதிப்பிலான திட்டத்தை ஹோலி தமாகா என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் 399

மார்ச் 1, 2018 முதல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய மற்றும் பழைய போஸ்ட்பெய்டு வாடிகையாளர்களுக்கு ரூ.399 கட்டணத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை ரோமிங் உட்பட அனைத்து வட்டங்களில் கிடைக்கும். இதனை தவிர 30ஜிபி 3ஜி அல்லது 4ஜி (கேரளா வட்டத்தில் மட்டும்) டேட்டா நன்மையை அளிக்கின்றது.

மேலும் இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட டேட்டா வழஙங்காமல் வாடிக்கையாளர் விருப்பம் போல பயன்படுத்த வழிவகுகின்றது.

ஜியோ போஸ்ட்பெய்டு 399 திட்டத்தில் 30ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு வழங்குகின்றது. ஏர்டெல் மற்றும் வோடபோன் ரூ.399 கட்டணத்தில் 20ஜிபி டேட்டா  வரம்பற்ற அழைப்பை வழங்குகின்றது

நோக்கியா மற்றும் ZTE ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து பிஎஸ்என்எல் 20 தொலைத் தொடர்பு வட்டங்களில் 4ஜி எல்டிஇ சேவையை இந்த வருட இறுதிக்குள் செயற்படுத்த திட்டமிட்டுள்ளது.

மேலும் படிங்க –

பிஎஸ்என்எல் 333 & பிஎஸ்என்எல் 444 பிளான்களில் கூடுதல் நண்மைகள்