BSNL Rs.399 : தினமும் 3.21 ஜி.பி. டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ரூ.399 பிளான்

பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited -BSNL) டெலிகாம் நிறுவனம், ரூ.399 கட்டணத்தில் வழங்குகின்ற பிளானில் தினமும் 3.21 ஜி.பி. டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த பிளான் ஜனவரி 31ந் தேதி வரை மட்டும் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.399

பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையிலான திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது. குறிப்பாக ஜியோ நிறுவனத்தின் ரூ.399 பிளான் மிகவும் பிரசத்தி பெற்றதாக விளங்குகின்றது.

இந்த பிளானுக்கு எதிராக பிஎஸ்என்எல் நிறுவனம் , நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1 ஜிபி டேட்டா வழங்குவதுடன் , வரம்பற்ற அழைப்பு நன்மையை வழங்கி 74 நாட்கள் செல்லுபடியாகின்ற ரூ.399 பிளானில் தற்போது புதிய மாற்றத்தை தற்காலிகமாக ஏற்படுத்தியுள்ளது.

வரும் ஜனவரி 31ந் தேதி வரை ரூ.399 பிளான் ரீசார்ஜ் செய்து கொள்கின்ற பிஎஸ்என்எல் பயனாளர்கள், நாள் ஒன்றுக்கு 3.21 ஜி.பி. டேட்டா நன்மையை பெறுவார்கள். அதாவது மொத்தமாக 74 நாட்களுக்கு 237.54 ஜி.பி. டேட்டாவை பெற உள்ளனர்.  கூடுதலாக எவிதமான நிபந்தனையற்ற அன்லிமிடேட் வாய்ஸ் கால் நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை பெறலாம்.

இந்த டேட்டா வேகம் 3ஜி அல்லது 2ஜி வாயிலாக மட்டும் பெறலாம். பிஎஸ்என்எல் 4ஜி சேவை அடுத்த சில மாதங்களில் பரவலாக முன்னணி நகரங்களில் தொடங்கப்படக்கூடும்.

BSNL Rs.399 : தினமும் 3.21 ஜி.பி. டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ரூ.399 பிளான்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ரூ.399 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜி.பி. டேட்டா பெறுவதுடன், வரம்பற்ற அழைப்பு நன்மை, 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலி நன்மையை வழங்குகின்றது.