ரூ. 444-க்கு நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்

நாட்டின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்  ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூபாய் 444 கட்டணத்திலான பிளானில் தற்போது நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா என 60 நாட்களுக்கு செல்லுபடியாகின்ற வகையில் வழங்குகின்றது. முன்பாக இந்த பிளானில் நாள் ஒன்றுக்கு 4 ஜிபி டேட்டா நன்மை வழங்கப்பட்டது.

சமீபத்தில் 4ஜி சேவையில் முன்னணி வகிக்கும் ஜியோ 1.5 ஜிபி கூடுதல் டேட்டா நன்மை டபுள் தமாகா ஆஃபர் என்ற பெயரில் அறிவித்திருந்த நிலையில், பிஎஸ்என்எல் வழங்கி வந்த ரூ. 444 திட்டத்தில் இதுவரை நாள் ஒன்றின் பயன்பாட்டுக்கு 4ஜிபி உயர் வேக டேட்டா வழங்கப்பட்ட நிலையில், இனி தினமும் அதிகபட்ச உயர்வேக 3ஜி டேட்டா 6ஜிபி என உயர்த்தப்பட்டு, தினசரி டேட்டா பயன்பாட்டுக்கு பிறகு 60 Kbps வேகத்தில் இணையத்தை பெறலாம். மேலும் இந்த பிளானில் பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் அழைப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது. ஆனால் மற்ற நெட்வொர்க்குகளுக்கு , எஸ்எம்எஸ் நன்மை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கதாகும்.

பொதுத்துறை நிறுவனம், தனியார் தொலை தொடர்புத்துறை நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மாற்றியமைத்து வருகின்றது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ரூ. 333 ட்ரிப்பிள் ஏஸ் திட்டம் 5 ஜிபி டேட்டா நன்மை வழங்கப்பட்டு பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் அழைப்பு ந்ஃமையை வழங்குகின்றது.

இந்த சலுகை பிஎஸ்என்எல் ஆப் மற்றும் அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் ரீசார்ஜ் செய்துக் கொள்ளலாம்.

Recommended For You