பிஎஸ்என்எல்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற சிக்ஸர் 666 ரீசார்ஜ் பிளானின் வேலிடிட்டி தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் அதிகம் விரும்பாத நீண்ட வேலிடிட்டி கொண்ட ரூ.999 மற்றும் ரூ.2,099 ஆகிய இரு திட்டங்களை கைவிட்டுள்ளது.

ரூ.999 ரீசார்ஜ் திட்டத்தில் முதல் 181 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 3.2 ஜிபி டேட்டா மற்றும் மொத்தமாக 365 நாட்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் கால் முறையில் வழங்கப்பட்டு வந்தது. ரூ.2,099 ரீசார்ஜ் திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக வழங்கப்பட்டு வந்தது.

பிஎஸ்என்எல் 666 ரீசார்ஜ் ஆஃபர்

ரூ.666 என்ற சிக்ஸர் பேக், தினமும் 3.7 ஜிபி டேட்டா சேவையை 122 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கி வருகிறது. வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்-களை வழங்கி வருகின்ற நிலையில் தற்போது இந்த பிளான் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இனி, இந்த திட்டத்தினை ரீசார்ஜ் செய்யும் பயனாளர்களுக்கு, சிக்ஸர் பேக் திட்டத்தின் வேலிடிட்டியை 134 நாட்களாக பிஎஸ்என்எல் நிறுவனம் அதிகரித்துள்ளது. தற்பொழுது இந்த திட்ட அடிப்படையில் பயனர்கள் ரூ.666 திட்டத்தை நீண்ட வேலிடிட்டியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனம், தொடர்ந்து தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு மிகுந்த சவாலான திட்டங்களை வழங்கி வருகின்றது.