பிஎஸ்என்எல்

பொதுத்துறை பிஎஸ்என்எல் நிறுவனம், ரூ.666 கட்டணத்தில் வழங்குகின்ற சிக்ஸர் பிளானில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா நன்மை மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை வழங்குகின்றது.

இந்த திட்டம் முந்தைய ரூ.333 மற்றும் ரூ.444 என இரு திட்டங்களுடன் , தற்போது ரூ.666 திட்டதில் வேலிடிட்டி காலம் குறைக்கப்பட்டுள்ளது. சில வாரங்களாக  பிஎஸ்என்எல் ரூ.98 , ரூ.99 மற்றும் ரூ.319 ஆகிய பிளான்களின் வேலிடிட்டியை குறைத்திருந்தது.

பிஎஸ்என்எல் 666

கீழ் லோக்கல் மற்றும் STD கால்கள் வரம்பற்ற முறையில் வழங்கப்படுவதுடன் கூடுதலாக நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்த பிளானில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.

தினசரி இணைய வேகத்தை கடந்த பிறகு 40Kbps இணைய வேகத்துடன் வரம்பற்ற முறையில் பெற்று பயனடையலாம். சிக்ஸர் பிளான் 666 ரூபாய்க்கு 122 நாள்கள் வேலிடிட்டி கொண்டதாக உள்ளது. இதற்கு முன்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 129 நாட்களாக இருந்தது.

ஆனால் இந்த பிளானில் ஏப்ரல் 30ந் தேதி வரை பம்பர் ஆஃபர் முறை வழங்ப்படுவதனால் 2.2 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்பட்டு மொத்தமாக 3.7 ஜிபி டேட்டா நன்மையை தினசரி பயனாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.