தினமும் 3 ஜிபி டேட்டா வெறும் ரூ.78 பிஎஸ்என்எல் ஆஃபர்

பொதுத்துறை பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம், தனது ப்ரீபெயட் பயனாளர்களுக்கு இலவச எரோஸ் நவ் (Eros Now) வீடியோ சேவையுடன் கூடிய பிஎஸ்என்எல் ரூ.78 ரீசார்ஜ் பிளானை வெளியிட்டுள்ளது. இந்த பிளானில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா பெற்றுக் கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ.78

எரோஸ் நவ் வீடியோ சேவையுடன் கூடிய முதல் பிளானை நாட்டின் பொதுத்துறை பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நாட்டின் மற்ற டெலிகாம் நிறுவனங்களான வோடபோன் ஐடியா, ஏர்டெல், மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் முன்பாகவே எரோஸ் நவ் வீடியோக்கள் வழங்கப்படுகின்றது.

சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் எரோஸ் நவ் உடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து முதல் ரீசார்ஜ் பிளானாக ரூ.78 மதிப்பில் வெளியிட்டுள்ளது. இந்த பிளானில் கிடைக்கின்ற நன்மைகளை தொடர்ந்து காணலாம்.

ரூ.78 ரீசார்ஜ் கட்டணத்தில் வழங்கப்பட்டுள்ள பிளான் அனைத்து வட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். இந்த பிளானில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளிமாநில அழைப்புகள், நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 3ஜிபி டேட்டா அதன் பிறகு வேகம் 64 Kbps ஆக குறைக்கப்பட உள்ளது. இந்த பிளான் வேலிடிட்டி 8 நாட்கள் மட்டும். இந்த ரீசார்ஜ் பிளானில் கூடுதல் நன்மையாக 11,000 க்கு அதிகமான பிரிமியம் Eros Now வீடியோவை கண்டு மகிழலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் 3 ஜிபி டேட்டா வெறும் ரூ.78 பிஎஸ்என்எல் ஆஃபர்

இந்த ரீசார்ஜ் பிளான் தற்போது பிஎஸ்என்எல் பயனாளர்களுக்கு நாடு முழுவதும் கிடைக்க தொடங்கியுள்ளது.