300 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.786 பிஎஸ்என்எல் பிளான் விபரம்

ஈத் முபாரக் திருநாளை முன்னிட்டு நாட்டின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ரூ. 786 (BSNL EID Mubarak STV 786) கட்டணத்தில் 150 நாட்கள் அதாவது 5 மாதங்களுக்கு வேலிடிட்டி கொண்ட பிளானாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரமலான் 2018 திட்டத்தில் அளவில்லா அழைப்பு மற்றும் நாள் ஒன்றிற்கு 2 ஜிபி டேட்டா வழங்குகின்றது.

பிஎஸ்என்எல் 786

300 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.786 பிஎஸ்என்எல் பிளான் விபரம்

நாட்டின் அனைத்து வட்டங்களில் செல்லபடியாகின்ற வகையில் வெளியிடப்பட்டுள்ள ரமலான் 2018 திட்டத்தில் 150 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக வெளியிடப்பட்டுள்ள இந்த பிளான் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நன்மைகளை வழங்குகின்றது.

BSNL EID Mubarak STV 786 பிளானில் நாள் ஒன்றிற்கு 2ஜிபி டேட்டா என மொத்தமாக 300 ஜிபி டேட்டா, அளவில்லா உள்ளூர், வெளியூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் உட்பட, தினசரி 100 எஸ்எம்எஸ் என மொத்தமாக 15,000 எஸ்எம்எஸ் என 150 நாட்கள் செல்லுபடியாகின்ற வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

300 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.786 பிஎஸ்என்எல் பிளான் விபரம்

ஜூன் 12 முதல் கிடைக்க தொடங்கியுள்ள பிஎஸ்என்எல் ஈத் முபாரக் 786 திட்டம் , 15 நாட்களுக்கு மட்டும், அதாவது ஜூன் 26, 2018 நாளை வரை மட்டும் கிடைக்க உள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் ரூ. 149 கட்டணத்தில் தினசரி 4ஜிபி டேட்டா வழங்கும் சிறப்பு பிளானை ஃபிபா உலக கோப்பை 2018 கால்பந்து போட்டியை முன்னிட்டு வெளியிட்டுள்ளது.