561.1 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல் பம்பர் ஆஃபர் முழுவிபரம்

நாட்டின் பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனம், தொடர்ந்து தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு கடும் சவாலை விடுத்து வரும் நிலையில் பி.எஸ்.என்.எல் பம்பர் ஆஃபர் என்ற பெயரில் ரூ.999 கட்டணத்திலான திட்டத்தில் 181 நாட்களுக்கு 561.1 ஜிபி டேட்டா வழங்க தொடங்கியுள்ளது.

நாட்டிலுள்ள 19 வட்டங்களில், அதாவது மும்பை மற்றும் டெல்லி தவிர அனைத்து வட்டங்களிலும் செயற்படுத்தப்பட்டுள்ள பம்பர் ஆஃபர் திட்டத்தில் குறிப்பாக கூடுதல் டேட்டா நன்மை வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு, இலவச ரோமிங் உட்பட பல சலுகைகளை வழங்குகின்றது.

குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.999 பிளான் முன்பு நாள் ஒன்றுக்கு 2.2 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில் இனி நாள் ஒன்றுக்கு 3.1 ஜிபி அளவிற்கான 2ஜி அல்லது 3ஜி டேட்டா பெறுவதுடன் 181 நாட்கள் அதாவது 6 மாத வேலிடிட்டி வழங்கப்படுகின்றது. மேலும் எவ்விதமான கட்டுபாடுமின்றி  வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு, இலவச ரோமிங் உட்பட பல சலுகைகளை ஆகியவற்றுடன் தினசரி யன்பாட்டு டேட்டா தீர்ந்த பிறகு 40Kbps வேகத்தில் இணையத்தை வழங்க உள்ளது.

561.1 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல் பம்பர் ஆஃபர் முழுவிபரம்

வருடாந்திர பிளான்கள்

சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்ட ரூ.1699 மற்றும் ரூ.2099 ஆகிய இரு திட்டங்களும் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக வந்துள்ளது குறிப்பாக இந்த திட்டங்களும் தற்போது கூடுதல் டேட்டா நன்மையை பெற்றுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.1699 பிளான் முன்பு நாள் ஒன்றுக்கு 2.1 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில் இனி நாள் ஒன்றுக்கு 4 ஜிபி அளவிற்கான 2ஜி அல்லது 3ஜி டேட்டா பெறுவதுடன் 365 நாட்கள் அதாவது ஒரு வருட வேலிடிட்டி வழங்கப்படுகின்றது. மேலும் எவ்விதமான கட்டுபாடுமின்றி  வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு, இலவச ரோமிங் உட்பட பல சலுகைகளை ஆகியவற்றுடன் தினசரி யன்பாட்டு டேட்டா தீர்ந்த பிறகு 40Kbps வேகத்தில் இணையத்தை வழங்க உள்ளது.

561.1 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல் பம்பர் ஆஃபர் முழுவிபரம்

பிஎஸ்என்எல் ரூ.2099 பிளான் முன்பு நாள் ஒன்றுக்கு 4 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில் இனி நாள் ஒன்றுக்கு 6.21 ஜிபி அளவிற்கான 2ஜி அல்லது 3ஜி டேட்டா பெறுவதுடன் 181 நாட்கள் அதாவது 6 மாத வேலிடிட்டி வழங்கப்படுகின்றது. மேலும் எவ்விதமான கட்டுபாடுமின்றி  வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு, இலவச ரோமிங் உட்பட பல சலுகைகளை ஆகியவற்றுடன் தினசரி யன்பாட்டு டேட்டா தீர்ந்த பிறகு 40Kbps வேகத்தில் இணையத்தை வழங்க உள்ளது.