bsnl

நாட்டின் பொதுத்துறை டெலிகாம் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு வழங்கி வரும் ரூ.1999 வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு வேலிடிட்டி 436 நாட்களாக உயர்த்தியுள்ளது. முன்பாக வழங்கப்பட்ட வேலிடிட்டியை விட 71 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மற்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தாமல் வேலிடிட்டி உள்ளிட சில கனிசமான சலுகைகளை தொடர்ந்து வழங்கி வரும் பிஎஸ்என்எல் நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26, 2020 முதல் பிப்ரவரி 15, 2020 வரை ரீசார்ஜ் செய்யும் பயனாளர்களுக்கு, அதாவது ரூ.1999 கட்டணத்திலான பிளான தேர்வு செய்பவர்களுக்கு 71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியை அறவித்துள்ளது.

பொதுவாக இந்த பிளானில் தினசரி பயன்பாட்டிற்கு 3 ஜிபி டேட்டா மற்றும் 250 நிமிட அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் வழங்கி வேலிடிட்டியை 365 நாட்களாக கொண்டிருந்தது. குடியரசு தினத்தை முன்னிட்டு இனி வேலிடிட்டி 436 நாட்களாகும்.

பிஎஸ்என்எல்லில் உள்ள நீண்டகால செல்லுபடியாகின்ற ரீசார்ஜ் திட்டமாகும். தற்போதுள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. புதிய பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் ரூ .1999 திட்டத்தை தங்கள் முதல் ரீசார்ஜ் (எஃப்ஆர்சி) விருப்பமாகவும் தேர்வு செய்யலாம்.