பிஎஸ்என்எல் Recharge

பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம், தனது ப்ரீபெய்ட் பயனாளர்களுக்கு ரூ.298 கட்டணத்தில் வழங்குகின்ற பிளானில் எரோஸ் நவ் இலவச சந்தா உட்பட தினமும் 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை வழங்குகின்றது.

BSNL Rs 298 Prepaid Plan சிறப்பு சலுகைகள் என்னென்ன ?

பி.எஸ்.என்.எல் டெலிகாம் நிறுவனம், தொடர்ந்து டேட்டா சலுகைகள் உட்பட வரம்பற்ற அழைப்புகள் அமேசான் பிரைம் சந்தா, எரோஸ் நவ் சந்தா உட்பட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. தொடர்ந்து தனியார் நிறுவனங்களுக்கு சவால் ஏற்படுத்தி வரும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை விரைவில் தொடங்க உள்ளது.

ரூ. 298 கட்டணத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த பிளானில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா சலுகை, வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் ஆகியவற்றை 54 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றது. தினசரி உயர்வேக டேட்டா வரம்பை கடந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைக்கபடும் என குறிப்பிட்டுள்ளது.

தற்போது இந்த திட்டத்தில் கூடுதல் நன்மையாக எரோஸ் நவ் சேவையானது 54 நாட்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்குகின்றது.

சமீபத்தில் பொதுத் துறை பிஎஸ்என்எல் நிறுவனம், 8 நாட்களுக்கான ரூ.78 பிளான், 24 நாட்களுக்கு ரூ. 98 பிளான், ரூ. 333 மற்றும் ரூ.444 ஆகிய திட்டங்களில் எரோஸ் நவ் சேவை வழங்கப்படுகின்றது.