நாள் ஒன்றுக்கு 4ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ரூ.379 பிளான் விபரம்

இந்தியாவின் பொது தொலைத் தொடர்பு பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம், தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 379 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 4ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகின்றது.

பிஎஸ்என்எல் 379

நாள் ஒன்றுக்கு 4ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ரூ.379 பிளான் விபரம்

முதற்கட்டமாக கேரளா வட்டத்தில், பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 4ஜிபி டேட்டா-வை 30 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக வரம்பற்ற பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு தினசரி 30 நிமிடங்கள் அழைப்புகளை மேற்கொள்ளலாம். மேலும் எஸ்எம்எஸ் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.

இதே போன்ற திட்டத்தை முன்னணி 4ஜி டெலிகாம் நிறுவனமாக விளங்கும் ஜியோ, ரூ.579 கட்டணத்தில் தினசரி 4ஜிபி டேட்டா , வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை 28 நாட்கள் செல்லுபடியாகும். தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றது.

மேலும் வோடபோன் டெலிகாம் நிறுவனம், 28 நாட்களுக்கு செல்லுபடியாகின்ற, ரூ.549 கட்டணத்தில் தினசரி 3.5ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 250 நிமிடங்கள் அல்லது 1000 நிமிடங்கள் 7 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது. தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றது.

மேலே வழங்கப்பட்டுள்ள வோடபோன், ஜியோ ஆகிய நிறுவனங்களின் திட்டத்தை விட கூடுதலான இரு தினங்கள் மற்றும் டேட்டா ஆகியவற்றுடன் ரூ.200 வரை விலை குறைந்த திட்டமாக விளங்குகின்னது. கேரளா வட்டத்தில் அதிகார்வப்பூர்வமாக வெளியிட்டுள்ள இந்த திட்டம் மற்ற வட்டங்களுக்கு கட்டணத்தில் சிறிய அளவிலான மாறுபாடுடன் கிடைக்கப் பெறலாம்.