bsnl

நாட்டின் பொதுத்துறை நிறுவனம் பிஎஸ்என்எல் தனது பயனாளர்களுக்கு தினமும் 5 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை செயற்படுத்தியுள்ளது. இது போட்டியாளர்களை விட மிக குறைவான விலையில், அதாவது ரூ.1.24 க்கு 1 ஜிபி டேட்டா ஆகும்.

முன்பாக இந்நிறுவனம் ரூ.318 கட்டணத்தில் வழங்குகின்ற திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை 84 நாட்களுக்கு அறிவித்திருந்தது. இப்போது வழங்கப்பட்டுள்ள புதிய ரூ.551 திட்டத்தின் விபரம் பின் வருமாறு ;-

90 நாட்கள் வேலிடிட்டி பெற்ற இந்த திட்டம் முழுமைக்கு டேட்டா சார்ந்த பலன்களை மட்டும் வழங்குகின்றது. மற்றபடி., வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்படவில்லை. முற்றிலும் டேட்டா நன்மையை மட்டும் வழங்குகின்றது.

3ஜி சேவையை வழங்கி வரும் இந்நிறுவனம் 4ஜி சேவையை பல்வேறு வட்டங்களில் சோதனை செய்து வருகின்றது. 4ஜி உள்ள இடங்களில் இந்த டேட்டாவை 4ஜி முறையிலும் பெறலாம். இந்நிறுவனம் செயற்படுத்தி வரும் மற்றொரு பிளான் ரூ.998 முற்றிலும் டேட்டா நன்மைக்கு 240 நாட்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகின்றது.