பிஎஸ்என்எல் Recharge

பிஎஸ்என்எல் ரீசார்ஜ் ஆஃபர் , விரைவில் 4ஜி சேவையை தொடங்க உள்ள நிலையில் ரூ.98 கட்டணத்திலான பிளானில் நாள் தோறும் 2 ஜிபி டேட்டா வரம்புடன், இலவச எரோஸ் நவ் சந்தாவை வழங்குகின்றது.

இந்தியாவின் பொதுத்துறை பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட், தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் ரூ.100 க்கு குறைந்த டேட்டா திட்டமான ரூ.98 ரீசார்ஜ் பிளானில், இதுவரை நாள் தோறும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி 2 ஜிபி டேட்டா வரம்பாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த பிளான் வேலிடிட்டி 24 நாட்கள் மட்டும் ஆகும்.

மேலும் இந்த பிளானில் முன்பு FUP முறையில் இணையத்தை அனுக இயலாத நிலை இருந்தபோது, தற்போது தினசரி உயர் வேக டேட்டா தீர்ந்த பிறகு 80 Kbps வேகத்தில் தொடர்ந்து இணையத்தை பெறலாம்.

சிறப்பு சலுகையாக பிஎஸ்என்எல் STV 98 பிளானில், இலவச Eros Now சந்தாவை 24 நாட்கள் வேலிடிட்டி காலத்துக்கு வழங்குகின்றது. இதற்கு முன்பாக இந்த திட்டத்தில் வேலிடிட்டி 26 நாட்களாக இருந்தது.

பிஎஸ்என்எல் ரூ.99

முந்தைய ரூ.98 பிளான் பிரத்தியேக டேட்டா திட்டமாக செயற்படுத்தப்படும் நிலையில், ரூ.99 பிளான் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்கும் பிளானாகும். இந்த திட்டமும் 24 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும்.

மேலும் ரூ.319 பிளான்  வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்கும் பிளானாகும். இந்த திட்டமும் 84 நாட்கள் வேலிடிட்டி (முன்பாக 90 நாட்கள் என இருந்தது) கொண்டதாகும்.

BSNL : ரூ.98க்கு நாள் தோறும் 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் ஆஃபர்

தமிழகத்தில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை, முதற்கட்டமாக சேலம் மற்றும் கோவை மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து திருச்சி, மதுரை, வேலூர் மற்றும் நாகர்கோவில் மாவட்டங்களில் விரிவாக்கப்பட உள்ளது.

பிஎஸ்என்எல் 4ஜி வேகம் அதிகபட்சமாக 21 எம்பி வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிஎஸ்என்எல் நிறுவனம், மூடுவதற்கான வாய்ப்பில்லை, தனது திட்டங்கள் மற்றும் புதிய விதமான அனுகுமுறையை விரைவில் மேற்கொள்ள பிஎஸ்என்எல் திட்டமிட்டு வருகின்றது.