BSNL : ரூ.98க்கு தினமும் 1.5 ஜி.பி. பிஎஸ்என்எல் டேட்டா சுனாமி ஆஃபர்

டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய சவாலாக அமைந்த ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து பிஎஸ்என்எல் டேட்டா சலுகை மூலம் தெறிக்கவிடுகின்றது. ரூ.98 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜி.பி. டேட்டா வழங்குவதாக டேட்டா சுனாமி என்ற பெயரில் பிளானை அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் டேட்டா சுனாமி

சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம்,  ரூ.399 பிளானில் 1 ஜிபி டேட்டாவிற்கு பதிலாக 3.21 ஜி.பி. டேட்டா வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த ஆஃபரை தெறிக்கவிடும் வகையில் டேட்டா சுனாமி என ரூ.98 கட்டணத்தில் அறிவித்துள்ளது.

அரசு பொதுத்துறை நிறுவனமாக செயல்படும் பிஎஸ்என்எல் நாடு முழுவதும் 2ஜி மற்றும் 3ஜி அலைவரிசை வாயிலாக டெலிகாம் சேவையை வழங்கி வருகின்றது. 4ஜி சேவையை வெகுவிரைவில் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டேட்டா சுனாமி என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.98 கட்டணத்திலான திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜி.பி. உயர்வேக டேட்டா வழங்க உள்ளது. இந்த பிளான் 26 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக கிடைக்கும். ஆனால் இந்த பிளானில் வாய்ஸ் கால் சேவையை மற்றும் எஸ்எம்எஸ் போன்றவை வழங்கப்படவில்லை.

BSNL : ரூ.98க்கு தினமும் 1.5 ஜி.பி. பிஎஸ்என்எல் டேட்டா சுனாமி ஆஃபர்

ஜியோ Vs பிஎஸ்என்எல்

ஜியோ நிறுவனம் ரூ.98 கட்டணத்திலான திட்டத்தில் மொத்தமாக 2 ஜி.பி உயர்வேக டேட்டா மற்றும் அதன் பிறகு 64 KBPS  வேகத்தில் இணையத்தை வழங்குவதுடன் வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் வழங்குகின்றது. இதே போல இந்நிறுவனத்தின் ரூ.149 பிளானில் மட்டுமே 1.5ஜிபி டேட்டா தொடங்குகின்றது.

பிஎஸ்என்எல் ரூ.98 கட்டணத்தில் 1.5 ஜி.பி. டேட்டா வழங்குவது இந்நிறுவனத்தின் 4ஜி சேவைக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகின்றது.