பி.எஸ்.என்.எல் ரூ.99 பிளான் வேலிடிட்டி குறைக்கப்பட்டது

பி.எஸ்.என்.எல் டெலிகாம் நிறுவனம், ரூ.99 கட்டணத்தில் வழங்கி வரும் அளவில்லா வாய்ஸ் கால் திட்டத்தின் வேலிடிட்டி காலத்தை குறைத்து அறிவித்துள்ளது. தற்போது வரை 26 நாட்களாக இருந்து வருகின்றது.

பி.எஸ்.என்.எல் ரூ.99

பொதுத்துறை டெலிகாம் நிறுவனமாக விளங்கும் பிஎஸ்என்எல் போட்டியாளர்களை விட மிக சவாலான விலையில் பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் பிரத்தியேக ரூ.99 வாய்ஸ் கால் பிளானில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.99 கட்டணத்தில் வழங்குகின்ற பிளானில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை 26 நாட்களாக இருந்த நிலையில், தற்போது 24 நாட்களாக குறைத்து வெளியிட்டுள்ளது. ஆனால் வரம்பற்ற அழைப்புகள் முறையில் எந்த மாற்றங்களும் இல்லை.

வாய்ஸ் கால் மட்டும் வழங்குகின்ற ரூ.319 பிளானில் வழங்கப்பட்ட 90 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தில் எந்த மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து வழங்கப்படுகின்றது.

புதிய சிம் மாற்று கட்டணத்தை உயர்ந்தது

பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம் ரூ.10 கட்டணத்தில் வழங்கி வந்த போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு சிம் மாற்றுவதற்கான கட்டணம் , தற்போது 10 மடங்கு அதிகரிக்கப்பட்டு ரூ.100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில வட்டங்களில் 4ஜி சிம் கார்டு வழங்கப்படுகின்ற கட்டணம் ரூ.19 மட்டும் வசூலிக்கப்படுகிறது.