பொது தொலை தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் தனது பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் சிக்ஸர் 666 என்ற புதிய பிளான் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தினமும் 2ஜிபி, அன்லிமிடேட் கால்கள் : பிஎஸ்என்எல் சிக்ஸர் 666

பிஎஸ்என்எல் சிக்ஸர் 666

தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்தும் வகையில் BSNL Sixer 666 என்ற புதிய பிளானை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிளான் அனைத்து பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பிஎஸ்என்எல் சௌக்கா 444 என்ற திட்டத்தின் கீழ் தினமும் 4ஜிபி டேட்டாவை 90 நாட்களுக்கு வழங்கியதை தொடர்ந்து தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பிளானில் தினமும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், இலவச ரோமிங் போன்றவற்றுடன் நாள் ஒன்றுக்கு வாடிக்கையாளர்கள் 2ஜிபி டேட்டா மற்றும் அதன் பிறகு தினசரி பயன்பாட்டிற்கு வேகம் 80Kbps  என்ற அளவில் குறைக்கப்படும்.

தினமும் 2ஜிபி, அன்லிமிடேட் கால்கள் : பிஎஸ்என்எல் சிக்ஸர் 666

தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் தினமும் 2ஜிபி வரையிலான டேட்டா அதிகபட்சமாக ரூ. 500 வரை கட்டணம் 30 நாட்களுக்கு வசூலிக்கின்ற நிலையில் 60 நாட்களுக்கு பொது தொலை தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள சிக்ஸர் 666 பிளான் உண்மையிலே நல்லதொரு சலுகையாகும்.

For the latest news, Mobile news, breaking news headlines and live updates checkout Gadgetstamilan.com