இந்தியாவின் முதல் இணைய தொலைபேசி : பி.எஸ்.என்.எல்

பொதுத்துறை தொலை தொடர்பு பி.எஸ்.என்.எல் நிறுவனம், இணைய சேவையை கொண்டு நாடு முழுவதும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அழைப்பினை மேற்கொள்ளும் இந்தியாவின் முதல் இணைய தொலைபேசி வசதியை விங்ஸ் ஆப் (Wings App) வாயிலாக வழங்கியுள்ளது.

இணைய தொலைபேசி என அறியப்படுகின்ற இந்த சேவையை பிஎஸ்என்எல் விங்ஸ் என்ற செயலி வாயிலாக மொபைல் மற்றும் தொலைபேசி என இரண்டுக்கும் செயற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக இந்த செயலி வாயிலாக இதே செயலி கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் அழைப்பை மேற்கொள்ள இயலும் என்ற நிலையை பிஎஸ்என்எல் மாற்றியமைத்துள்ளது.

விங்கஸ்  செல்பேசிச் செயலிகள் மூலம் அதே செயலியை வைத்துள்ள பயனாளர்கள் மட்டும் இணையவழித் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்தி வந்தனர. இந்நிலையில் செல்பேசிச் செயலி மூலம் தொலைபேசி எண்ணுக்கே பேசும் வசதியை பிஎஸஎன்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தச் சேவைக்கான முன்பதிவு இந்த வாரம் தொடங்குகிறது என்றும் பதிவு செய்தவர்களுக்கு வரும் 25-ம் தேதி முதல் இணையவழித் தொலைபேசிச் சேவை செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியைத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்கா தொடக்கி வைத்து புதிய முயற்சியை மேற்கொண்டுள்ள பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.