பிஎஸ்என்எல் ஆஃபர் : ரூ.39க்கு அன்லிமிடேட் அழைப்புகள்

இந்தியாவின் பொது தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் டெலிகாம் தொடர்ந்து தனியார் நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையிலான ரூ. 39 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகின்றது.

பிஎஸ்என்எல் 39

இந்தியாவின் முன்னணி 4ஜி வழங்குநராக விளங்குகின்ற ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், தனது ஜியோபோன் பயனாளர்களுக்கு ரூ.49 கட்டசத்தில் 28 நாட்களுக்கு 1ஜிபி டேட்டா தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகின்றது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் திட்டத்துக்கு எதிராக பிஎஸ்என்எல் களமிறங்கியுள்ளது.

பிஎஸ்என்எல் இயக்குநர் R.K மிட்டல் இந்த புதிய திட்டத்தை பற்றி கூறுகையில், வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து பூர்த்தி செய்யும் வகையில் 10 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டம் அமைந்திருக்கின்றது.

ரூ. 39 கட்டணத்தில் 10 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மும்பை மற்றும் டெல்லி வட்ட பயனாளர்களை தவிர அனைவருக்கும் வழங்குகின்றது. மேலும் பிஎஸ்என்எல் முதன்முறையாக 100 எஸ்எம்எஸ் வசதியை 10 நாட்களுக்கு வழங்குகின்றது.

இதை தவிர ரூ.99 கட்டணத்தில் 26 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள், ரூ. 319 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புகளை 90 நாட்களுக்கு வழங்குகின்றது. மும்பை மற்றும் டெல்லி வட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.45 கட்டணத்தில் வழங்கி வருகின்றது.

Recommended For You