பிஎஸ்என்எல்

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனம் பிஎஸ்என்எல் டெலிகாம், 56 ரூபாய்க்கு 14 நாட்கள் செல்லுபடியாகின்ற சிறப்பு டேட்டா ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துளது. குறிப்பாக எஸ்டிவி 56 பிளான் தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டத்தில் உள்ள பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு மட்டும் அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited -BSNL) டெலிகாம் சமீபத்தில் பல்வேறு கூடுதல் டேட்டா வழங்கும் பிளான்களையும், சில பிளான்களையும் நீக்கியுள்ள நிலையில் மற்றொரு அட்டகாசமான திட்டத்தை ரூ.56 கட்டணத்தில் வழங்கியுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் ரூ.46 ரீசார்ஜ் பிளானை கைவிட்டுள்ளது.

பிஎஸ்என்எல் 56 ரீசார்ஜ் ஆஃபர்

14 நாட்கள் செல்லுபடியாகின்ற இந்த ரீசார்ஜ் பிளான் பிரத்தியேகமாக டேட்டா சார்ந்த நன்மையை விரும்புபவர்களுக்கு மட்டும் பொருந்தும். இந்த ரீசார்ஜ் திட்டத்தில் எவ்விதமான வாய்ஸ் கால் நன்மை மற்றும் எஸ்எம்எஸ் போன்றவை வழங்கப்படுவதில்லை.

56 மதிப்புள்ள ரீசார்ஜ் பிளானில் பயனாளர்கள் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை மட்டும் 14 நாட்களுக்கு பெறலாம். வரும் மே 13 முதல் தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் கிடைக்க தொடங்கும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் இந்நிறுவனம் ரூ.198 கட்டணத்தில் வழங்குகின்ற பிரீபெய்டு ரீசார்ஜ் முறையில் தினசரி 2 ஜிபி வீதம் 54 நாட்களுக்கு வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தின் மூலம் மொத்தமாக 108 ஜிபி டேட்டா கிடைக்கும்