பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு இணையான சேவையை வழங்க தொடங்கியுள்ள நிலையில் புதிதாக பிஎஸ்என்எல் 269 கட்டணத்தில் தினமும் 1ஜிபி டேட்டா வழங்குகின்றது.
பிஎஸ்என்எல் 269
போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சந்தையில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வரும் பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம் 21 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.269 மதிப்பிலான விலையில் தினமும் 1ஜிபி 3ஜி டேட்டா வழங்குகின்றது.
மேலும் பிஎஸ்என்எஸ் நெட்வொர்கு அழைப்புகளுக்கு கட்டணம் இல்லை. மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு முதல் 20 நிமிடங்களுக்கு கட்டணம் இல்லை, அதன் பிறகு 0.20 பைசா கட்டணத்தில் அழைப்புகளை பெறலாம். இதுதவிர, லேண்ட்லைன் அழைப்புகளுக்கும் கட்டணம் இல்லை என்பது குறிப்பிடதக்கதாகும்.
நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள பிஎஸ்என்எல் STV 269 பிளானை பெற்றுக்கொள்ள டாப் அப் மற்றும் இணையதளம் வாயிலாகவும் பெறலாம். இந்த பேக் தமிழ்நாடு தொலை தொடர்பு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.