பிஎஸ்என்எல் ரூ.49 மற்றும் ரூ.108 திட்டங்களின் வேலிடிட்டி அதிகரிப்பு

பொதுத்துறை நிறுவனம் பிஎஸ்என்எல் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் STV 49 மற்றும் வவுச்சர் 108 ஆகிய இரண்டு திட்டங்களின் வேலிடிட்டியை 90 நாட்கள் வரை உயர்த்தியுள்ளது.

ஜியோ உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சவாலாக பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகின்ற பிஎஸ்என்எல் நிறுவனம் எஸ்டிவி 49 திட்டத்தில் பொதுவாக வழங்குகின்ற கூடுதல் கால அவகாசத்தை டிசம்பர் 1, 2020 முதல் அதிகரிக்கின்றது.

பிஎஸ்என்எஸ் STV 49

பொதுவாக இந்நிறுவனம் வழங்குகின்ற STV 49 திட்டத்தில் 100 நிமிடம் அனைத்து நெட்வொர்க் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ், மற்றும் 2 ஜிபி டேட்டா ஆகியவற்றை 28 நாட்கள் வேலிடிட்டியாக வழங்குகின்றது. இந்த சலுகை இப்போது 90 நாட்களாக நீட்டிக்கப்படுகின்றது. உங்களுடைய பிளான் நவம்பர் 30 நிறைவடைகின்றது என்றால் இந்த சலுகை நீட்டிக்கப்படும்.

100 நிமிட இலவச அழைப்புகளை கடந்த பிறகு நிமிடத்திற்கு 45 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

பிஎஸ்என்எல் ரூ.108

மொபைல் நம்பர் போர்ட் மூலமாக பிஎஸ்என்எல் வரும் பயனாளர்களுக்கு வழங்கப்படுகின்ற பிரத்தியேகமான ரூ.108 வவுச்சரில் பொதுவாக 45 நாட்கள் வேலிடிட்டியுடன் அனைத்து தொலைத்தொடர்புகளுக்கும் நாள் ஒன்றுக்கு 250 நிமிட இலவச அழைப்புகள், மொத்தமாக 500 எஸ்எம்எஸ் மற்றும் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி உயர் வேக டேட்டா பிறகு 80kbps  வேகத்தில் வரம்பற்ற இணையத்தை அனுகலாம்.

இப்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டி சலுகை பிப்ரவரி 28, 2021 வரை கிடைக்க உள்ளது.

web title : BSNL Extends Validity of STV 49, Voucher 108 to Offer 90 Days