லேண்ட்லைன் போனில் சாட்டிங், வீடியோ கால் வசதி பிஎஸ்என்எல்

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், அடுத்த தலைமுறை லேண்ட்லேன் தொலைப்பேசிகளை அறிமுகம் செய்ய திட்டமிடுள்ள நிலையில், இனி லேண்ட்லைன் போன் வாயிலாக வீடியோ அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் என ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகளை பெற வழிவகுக்கின்றது.

பிஎஸ்என்எல் லேண்ட்லைன் டெலிபோன்

லேண்ட்லைன் தொலைப்பேசி இணைப்புகள் குறைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள லேண்ட்லேன் இணைப்புகளை மேம்படுத்திக் கொள்ள பிஎஸ்என்எல் திட்டமிட்டு வருகின்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள புண்டி மற்றும் ஹின்டோலி ஆகிய பகுதிகளில் அடுத்த தலைமுறை லேண்ட்லைன் போன்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக புண்டி மாவட்ட டெலிகாம் மேலாளர் பி.கே அகர்வால் தெரிவித்துள்ளார்.

பி.கே அகர்வால் கூறுகையில், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அனைத்தும் அடுத்த தலைமுறை நெட்வொர்க்கிங்காக (Next Generation Networking (NGN) ) மாற்றியமைக்கப்பட உள்ளது. இதனால் லேண்ட்லேன் போனில் வீடியோ காலிங் வசதி, சாட்டிங், எஸ்எம்எஸ், மற்றும் காலர் டியூன் (personal ring back tone (PRBT)) உள்ளிட்ட வசதிகளை பெற வழி வகுக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

எனவே லேண்ட்லைன் போனில் இந்த வசதிகளை பெற ஐபி போனாக மேம்படுத்தவேண்டும் என குறிப்பிட்டுளார். இதுமட்டுமல்லாமல் லேண்ட்லைன் போனின் திட்டம் மொபைல் போனுக்கும் பெற இயலும் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You