இந்தியாவின் பொது தொலை தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் டிரிபிள் ஏஸ் என்ற பெயரில் ரூபாய் 333 கட்டணத்தில் தினமும் 3 ஜிபி டேட்டா என 90 நாட்களுக்கு வழங்குகின்றது.

பிஎஸ்என்எல் டேட்டா

  • மூன்று விதமான புதிய பிளான்களை பிஎஸ்என்எல்  அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ரூ.333 டேட்டா பிளானில் 90 நாட்களுக்கு தினமும் 3ஜிபி 3ஜி டேட்டா வழங்குகின்றது.
  • ரூ.349 திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை பெறலாம்.

தில் கோல் கே போல், டிரிபிள் ஏஸ் மற்றும் டெஹ்லா பெர் என மூன்று விதமான சிறப்பு பிளான்களை தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு சவாலாக வழங்கியுள்ளது.

தில் கோல் கே போல்

ரூபாய் 349 கட்டணத்தில் வழங்கப்படுகின்ற தில் கோல் கே போல் பிளானில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை அனைத்து நெட்வொர்க்களுக்கும் மேற்கொள்வதுடன் 2ஜிபி டேட்டா என 28 நாட்கள் கால அளவு வழங்கப்பட்டுள்ளது.

டிரிபிள் ஏஸ்

ஜியோ தன் தனா தன் பிளானை வீழ்த்தும் வகையில் தினமும் 3 ஜிபி டேட்டா 90 நாட்களுக்கு ரூபாய் 333 கட்டணத்தில் வழங்கப்படுகின்றது.

டெஹ்லா பெர்

தினமும் 2ஜிபி டேட்டா, மாதம் பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் 3000 இலவச நிமிடங்கள் மற்றும் மாதம் 1800 நிமிடங்கள் மற்ற தொடர்புகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதுதவிர இலவச அழைப்பு நிமிடங்களுக்கு தீர்ந்த பிறகு அழைப்பு நிமிடத்திற்கு 20 பைசா என்ற கட்டணத்தில் வழங்கப்படும்.

எந்த பிளான் பெஸ்ட் சாய்ஸ் உங்கள் கமென்ட் என்ன சொல்லுங்க,…!