இந்த ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்க உள்ளதாக பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுப்பா ஸ்ரீவஸ்தவா பிடிஐ செய்தி பிரிவுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பிஎஸ்என்எல் 4ஜி

4ஜி சேவையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் சிறப்பான முறையில் சந்தையில் செயற்பட்டு வரும் நிலையில் நாட்டின் பொது தொலைத் தொடர்பு நிறுவனமாக விளங்கும் பிஎஸ்என்எல் முதற்கட்டமாக கேரளா வட்டத்தில் சில பகுதிகளில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ.25,000 கோடி முதலீட்டில் நாடு முழுவதும் 2100 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 4G VOLTE சேவையை துவக்க அரசின் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இந்த ஆண்டின் இறுதியில், நாடு முழுவதும் 4 ஜி சேவையை செயல்படுத்துவோம், என “பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுப் ஸ்ரீவாஸ்தவா, கூறியுள்ளார்.

அரசு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடுக்கு ரூ.12,000 கோடி என விலையை நிர்னையம் செய்துள்ள நிலையில், அரசுக்கு ரூ. 9000 கோடி வரை வழங்கும் என்பதனால், மீதமுள்ள 10,000 கோடியை பிஎஸ்என்எல் 10 தவனையாக செலுத்த உள்ளது.

4ஜி சேவை சார்ந்த நுட்பங்களை வழங்குவதில் முன்னணி வகிக்கும் நோக்கியா மற்றும் ZTE ஆகியிரு நிறுவனங்களும் 10 தொலைத் தொடர்பு வட்டங்களை பகிர்ந்து கொண்டுள்ளது.