உலகளவில் ஐந்தாவது தலைமுறை தொலைத்தொடர்பு சேவை தொடங்கும்போது இந்தியாவில் பிஎஸ்என்எல் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக பி.எஸ்.என்.எல்., நிறுவன தலைமை பொது மேலாளர் அனில் ஜெயின் தெரிவித்துள்ளார்.
பிஎஸ்என்எல் 5ஜி
சமீபத்தில் புது டெல்லியில் நடைபெற்ற மொபைல் போன் நிறுவன கூட்டமைப்பின் கருத்தரங்கில் பேசிய இந்நிறுவன தலைமை பொது மேலாளர் அனில் ஜெயின் குறிப்பிட்ட சில கருத்துகளில், 3ஜி மற்றும் 4ஜி சேவை வழங்குவதில் பின் தங்கியிருந்த நிலை இல்லாமல், சர்வதேச அளவில் 5ஜி சேவை தொடங்கும்போதே , இந்தியாவில் பிஎஸ்என்எல் நிறுவனமும் 5ஜி சேவையை வழங்குவதற்கான திட்டங்களை செயற்படுத்த தொடங்கியுள்ளதால் 5ஜி சேவையை வழங்குவதில் பிஎஸ்என்எல் பின்தங்காது என குறிப்பிட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு முதல் 5ஜி சேவை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், நாட்டின் பொதுத்துதுறை நிறுவனம், இதற்கான கட்டமைப்பினை உருவாக்க நோக்கியா, கோரியன்ட், ZTE ஆகிய நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.
பி.எஸ்.என்.எல்., துவக்கும். இதற்காக, ஜப்பானைச் சேர்ந்த, என்.டி.டி.ஏ.டி.சி., நிறுவனத்தின் துணை நிறுவனமான, விர்கோ கார்ப்பரேஷன் உடன், ஒப்பந்தம் செய்துள்ளோம். இதன் மூலம், சோதனை அடிப்படையில், ‘5ஜி’ சேவை மேற்கொள்ளப்படும். இது தவிர, சாப்ட்வேர் சார்ந்த ஒருங்கிணைப்பு வசதிகளுக்கு, நோக்கியா நிறுவனத்துடன் இணைந்துள்ளோம்.
மேலும், தொழில் நிறுவனங்களுக்கு, ‘5ஜி’சேவை வழங்குவதற்கு தேவையான நவீன தொழில்நுட்பங்களுக்கு, அமெரிக்காவின் கோரியன்ட் நிறுவனத்துடன், பி.எஸ்.என்.எல்., கைகோர்த்துள்ளது. கடந்த ஆண்டு, செப்.,ல், இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தொலை தொடர்பு துறையிடம், ‘4ஜி’ மட்டுமின்றி, ‘5ஜி’ சேவையை வழங்குவதற்காக, 700 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை உரிமம் பெறப்பட்டுள்ளது. இத்தகைய முன்னேற்பாடுகளால், உலகளவில் ‘5ஜி’ சேவை அறிமுகமாகும்போது, இந்தியாவிலும், அச்சேவையை பி.எஸ்.என்.எல்., துவக்கும். இவ்வாறு அவர் கூறினார்.