அரசு தொலைத்தொடர்பு பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் சிறப்பு திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றது.

பிஎஸ்என்எல் ரேட் கட்டர்கள்

பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல்வேறு டேட்டா பிளான்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்ற நிலையில் வாய்ஸ் கால் மேற்கொள்ளும் பயனாளர்களுக்கு ரூ.8 மற்றும் ரூ.19 என இரு விதமான எஸ்டிவி பிளான்களை நாடு முழுவதும் உள்ள அனைத்து ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

 

பிஎஸ்என்எல் STV 8

ரூ.8 கட்டணத்தில் வழங்கப்பட்டுள்ள பிளானில் பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் நிமிடத்திற்கு 15 பைசா கட்டணத்திலும், நிமிடத்திற்கு 30 பைசா கட்டணமாக இந்தியாவில் உள்ள அனைத்து நெட்வொர்கிற்கு வழங்குகின்றது. இதன் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் STV 19

ரூ.19 கட்டணத்தில் வழங்கப்பட்டுள்ள பிளானிலும் பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் நிமிடத்திற்கு 15 பைசா கட்டணத்திலும், நிமிடத்திற்கு 30 பைசா கட்டணமாக இந்தியாவில் உள்ள அனைத்து நெட்வொர்கிற்கு வழங்குகின்றது. இதன் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

இந்த இரு திட்டங்களும் செப்டம்பர் 4 முதல் அனைத்து பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் வழங்குகின்றது.

சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையை தொடங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளை நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. மார்ச் 2018 முதல் சோதனை ஓட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.