இந்தியாவில் மிக சவாலான துறையாக மாறி வருகின்ற டெலிகாம் பிரிவில் பிஎஸ்என்எல் தனியார் டெலிகாம் நிறுவனங்களை எதிர்கொள்ள மிக கடுமையான திட்டங்களை தொடர்ந்து செயற்படுத்தி வரும் நிலையில் இரண்டு வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்கும் ரூ.99 மற்றும் ரூ.319 ஆகிய திட்டங்களை செயற்படுத்தி உள்ளது.

பிஎஸ்என்எல் அன்லிமிடெட் காலிங்

சமீபத்தில் பிஎஸ்என்எல் மேக்சிமம் 999 என்ற ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகின்ற திட்டத்தில் வரம்பற்ற அன்லிமிடேட் கால்களை 181 நாட்களுக்கு வழங்குவதுடன் தினமும் 1ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்குகின்றது. 182-365 நாள் வரை நிமிடத்திற்கு 60 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.

இதைத்தவிர பிஎஸ்என்எல் மினிபேக் என்ற பெயரில் ரூ.9 மற்றும் ரூ.16 ஆகிய திட்டங்களில் ஒற்றை நாட்கள் செல்லுபடியாகிற வகையில் 1ஜிபி டேட்டா மற்றும் 2ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்க உள்ளது.

புதிதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள ரூ. 99 STV  திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குவதுடன் 26 நாட்கள் வரை செல்லுபடியாகும்.

மற்றொரு திட்டமான ரூ.319 STV வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குவதுடன் 90 நாட்கள் வரை செல்லுபடியாகும். இரு திட்டங்களும் ரோமிங் டெல்லி மற்றும் மும்பை வட்டங்களில் மட்டும் கிடைக்கப் பெறாது என பிஎஸ்என்எல்அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.