பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம், இந்தியாவில் ஒய்-ஃபை ஹாட்ஸ்பாட் மையங்களை சுமார் 30,419 ஹாட்ஸ்பாட் சேவையை 16,367 இடங்களில் வழங்கியுள்ளது. இந்த சேவைக்கு என பிரத்தியேகமான வவுச்சர்களை அறிமுகம் செய்துள்ளது.

உங்கள் ஊரில் எங்கே பிஎஸ்என்எல் வை ஃபை  ஹாட்ஸ்பாட் சேவை கிடைக்குமா ? மற்றும் கட்டண விபரங்கள் மேலும் எவ்வாறு பயன்படுத்துவது போன்ற விபரங்களை இங்கே நாம் அறிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ஒய்-ஃபை ஹாட்ஸ்பாட் ரீசார்ஜ் பிளான்கள்

கடந்த 2018 இந்தியன் மொபைல் காங்கிரஸ் அரங்கில் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா வெளியிட்ட அறிவிப்பின்படி நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் வை பை ஹாட்ஸ்பாட்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த சேவையை தொடங்கியுள்ளது.

தமிழகம் உட்பட 20 வட்டங்களில் சுமார் 16,367 இடங்களில், 30,419 வை-ஃபை ஹாட்ஸ்பாட் மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 571 இடங்களில் 571 ஹாட்ஸ்பாட் மையங்கள், சென்னையில் 182 இடங்களில் 333 ஒய்ஃபை ஹாட்ஸ்பாட் வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

உங்களது அருகாமையில் கிடைக்கின்ற இடத்தினை அறிய — http://www.bsnl.co.in/wifi_hotspot.html இங்கே கிளிக் செய்யவும்.

ரூ.19, ரூ.39, ரூ.59 மற்றும் ரூ.69 என மொத்தமாக நான்கு பிளான்களை அறிவித்துள்ளது.  ரூ. 19 கட்டணத்தில் வழங்கப்படுகின்ற பிளானில் 2 ஜிபி டேட்டாவை 2 நாட்களுக்கு பெற முடியும்.

ரூ. 39 கட்டணத்தில் வழங்கப்படுகின்ற பிளானில் 7 ஜிபி டேட்டாவை 7 நாட்களுக்கு பெற முடியும்.

ரூ. 59 கட்டணத்தில் வழங்கப்படுகின்ற பிளானில் மொத்தமாக 15 ஜிபி டேட்டாவை 15 நாட்களுக்கு பெற முடியும்.

ரூ. 69 கட்டணத்தில் வழங்கப்படுகின்ற பிளானில் மொத்தமாக 30 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு பெற முடியும்.

வை-ஃபை இணைப்பு பெறும்போது உங்களுடைய மொபைலில் வை-ஃபைஆன் செய்யும் போது BSNL 4G Plus SSID என்ற நெட்வொர்க் கிடைக்கபெறும். இதனை கொண்டு உங்களுடைய  பிஎஸ்என்எல் மொபைல் எண்ணை உறுதி செய்து கட்டணத்தை செலுத்தி இணையத்தை பெறலாம்.

பிஎஸ்என்எல் சிம் பயன்படுத்தாத பயனாளர்களும் இணையத்தை பெற வழிவகு செய்யப்பட்டுள்ளது. இதனை பெற BSNL 4G Plus ஆப் மூலம் கணக்கை துவக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.