39 ஜிபி டேட்டா ரூ.98 மட்டும் பிஎஸ்என்எல் டேட்டா சுனாமி..!

நமது நாட்டின் பொது தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் டெலிகாம், சர்வதேச தொலைத் தொடர்பு தினத்தை (World telecommunication day) முன்னிட்டு டேட்டா சுனாமி என்ற பெயரில் ரூ.98 கட்டணத்தில் ஜியோ நிறுவனம் கூட வழங்க முடியாத டேட்டா சலுகையை 3ஜி வாயிலாக அறிவித்துள்ளது.

டேட்டா சுனாமி

ஜியோ, ஏர்டெல், வோடபோன் , ஐடியா உள்ளிட்ட தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் போட்டியை ஈடுகட்டும் நோக்கில் தொடர்ந்து மிக சவாலான திட்டங்களை வழங்குவதில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் முன்னணி வகிக்கின்றது.

அந்த வகையில் சமீபத்தில் ரூ.118 கட்டணத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வரம்பற்ற அழைப்பு மற்றும் 1ஜிபி டேட்டா மற்றும் இலவச காலர் டியூன் ஆகியவற்றை அறிவித்துள்ளது. அதே போல சமீபத்தில் 10 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்ட ரூ.39 மதிப்பிலான வரம்பற்ற அழைப்பு திட்டம் ஆகியவற்றை தொடர்ந்து புதிய திட்டத்தை உலக டெலிகாம் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளது.

டேட்டா சுனாமி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டத்தில் டேட்டா பலன் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிளானில் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சார்ந்த பலன்கள் வழங்கப்படாமல் 26 நாட்கள் செல்லுபடியாகின்ற வகையில் 1.5 ஜிபி டேட்டா நன்மையை தினசரி பயன்பாட்டுக்கு என மொத்தமாக 39 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகின்றது.

ஜியோ நிறுவனம் ரூ.149 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகின்றது.