பயனாளர்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்யும் டிடிஎச் மற்றும் கேபிள் டிவி புதிய விதிமுறைகளை தொடர்ந்து , பல்வேறு திட்டங்களை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி டிடிஎச் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான D2h தனது பயனாளர்களுக்கு நீண்ட நாள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை தேர்வு செய்தால் கூடுதலாக சில நாட்கள் முதல் மாதங்கள் வரை இலவச டிடிஎச் சேவையை அளிக்க உள்ளது.
டிஸ் டிவி நிறுவனத்தின் டி2ஹெச் பயனாளர்ள் , குறிப்பாக நீண்ட நாட்கள் கொண்ட பிளானை தேர்வு செய்தால் இலவசமாக டிவி சேனல்களை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக மூன்று மாதம் உள்ள டிடிஎச் திட்டத்தை தேர்வு செய்தால் 7 நாட்கள் கூடுதலாக இலவசமாக டிவி சேனல்களை பார்க்கலாம்.
5 மாதம் இலவச டி2ஹெச் சேவை
முன்பாக புதிய கேபிள் டிவி மற்றும் டிடிஎச் விதிமுறைப்படி நீண்ட கால வேலிடிட்டி பிளான்கள் திரும்ப பெறப்படும், வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி தர வேண்டும் என டிராய் குறிப்பிட்டிருந்தது. பிறகு வெளியிட்ட அறிக்கையில் நீண்ட வேலிடிட்டி கொண்ட திட்டங்களை தேர்ந்தெடுத்த பயனாளர்கள் அந்த திட்டம் நிறைவடையும் வரை முந்தைய பிளானிலும், அதன் பிறகு புதிய பிளானுக்கு மாற அனுமதி அளித்தது.
குறிப்பாக டி2ஹெச் வழங்கியுள்ள சலுகையை கீழே உள்ள அட்டவனையில் காணலாம்.
நீண்ட கால பிளான் | இலவச சந்தா |
3 மாத பிளான் | 7 நாட்கள் இலவசம் |
6 மாத பிளான் | 15 நாட்கள் |
11 மாத பிளான் | 30 நாள் |
22 மாத பிளான் | 60 நாட்கள் |
33 மாத பிளான் | 90 நாட்கள் |
44 மாத பிளான் | 120 நாட்கள் |
55 மாத பிளான் | 150 நாட்கள் |
குறிப்பாக 4.5 வருட பிளானை தேர்வு செய்தால் 5 வருடம் முழுமையாக டிடிஎச் சேவையை பெறலாம். மூன்று மாத பிளானுக்கு 7 நாட்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.