airtel-vs-vodafone-idea

நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு குழுமங்களான ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் செலுத்த வேண்டிய ஏஜிஆர் நிலுவைத் தொகையை இன்று நள்ளிரவு 11.59 மணிக்குள் செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக இரு நிறுவனங்களின் சேவையை பாதிக்கப்படும் என தெரிகின்றது. குறிப்பாக வோடஃபோன் ஐடியா தொடர்ந்து கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளதால் இந்நிறுவனம் சந்தையை விட்டு வெளியேறக்கூடும் என தகவல்கள் வெளியாகின்றன.

முன்னணி வோடபோன் ஐடியாவின் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் 55,000 கோடி ரூபாய் மற்றும் ஏர்டெல் நிறுவனம் 35,500 கோடி ரூபாய் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.