BSNL : பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்க தயாராகின்றது..!

பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடங்குவதற்கான இறுதிகட்ட அலைகற்றை ஒதுக்கீடு தொடர்பான முறையை மத்திய தொலைத்தொடர்பு துறை வழங்குமாறு கேட்டுள்ளது.

பிஎஸ்என்எல் 4ஜி டெலிகாம்

தனியார் டெலிகோ நிறுவனங்கள் 4ஜி சேவயின் காரணமாக பலவேறு நன்மைகளை பெற்று கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளன. ஆனால் நாட்டின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் 4ஜி சேவை இதுவரை தொடங்கவில்லை.

பிஎஸ்என்எல் Recharge

இந்நிலையில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பல்வேறு முன்னணி நகரங்கள் உட்பட கேரளா வட்டத்தில் சோதனையில் ஈடுபடுத்தி வருகின்றது. 5Mhz மூலம் 4ஜி அலைக்கற்றையை 2100 Mhz பேன்டில் வழங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. எனவே, இது தொடர்பான அறிக்கையை மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து கூறுகையில், தனியார்களுக்கு ஏலம் விட்டதால் அரசு நல்ல வருவாய் ஈட்டியது. ஆனால், நாம் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆதரவளிப்போம், அதே நேரத்தில், அவர்களின் திட்டமிடல் மற்றும் உபகரணங்கள் மற்றும் முன்னனுபவத் தயார்நிலைகளை நாங்கள் கண்காணிக்கும்,” என அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

BSNL : பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்க தயாராகின்றது..!

மேலும் அவர் கூறுகையில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒரே நேரத்தில் ஒதுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டில் பிஎஸ்என்எல் கோரிய 4ஜி அலைக்கற்றை தொடர்பாண விண்ணப்பத்தின் மதிப்பு ரூ.11,000 கோடி ஆகும்.

பிஎஸ்என்எல் மதிப்பீடுகளின் மொத்த செலவு ரூபாய் 9,600 கோடி. பிஎஸ்என்எல் எலுத்த வேண்டிய கட்டணம் பாதியாக இருக்கும். (அரசாங்கத்திற்கு கூடுதலான பங்குகளை வழங்குவதன் மூலம்) மற்றும் மற்றவர்களிடமிருந்து வருவாய் ஈட்டுவதன் மூலமாகவும் மீதமுள்ள தொகை வழங்கப்படும்.

BSNL : பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்க தயாராகின்றது..!

பிஎஸ்என்எல் 4ஜி வருகை விபரம்

முதற்கட்டமாக கேரளா உட்பட பல்வேறு நகரங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை சோதனை ஓட்ட முறையில் செயற்படுத்தி வருகின்றது. அடுத்த சில வாரங்களில் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

BSNL : பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்க தயாராகின்றது..!